ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2011

அகத்திய மாமகரிஷி அருளிய விநாயக தத்துவம்


DSC00007.JPG         DSC00008 (2).JPG
அகத்திய மாமகரிஷி 
அருளிய விநாயகதத்துவம்  
(பக்கம் 72-75)
அகஸ்திய மாமகரிஷி, விண்ணில் தன் எண்ணங்களைப் பாய்ச்சி, பேரண்டத்தின் உண்மையின் நிலைகளைத் தனக்குள் செலுத்தி, அந்த ஆற்றல்களை, தன் உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் இயக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து, மனிதனாகப் பிறந்தபின், உணர்வின் எண்ண அலைகளாக வெளிப்படுத்தும், அந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தினார்.

அவ்வாறு வெளிப்படுத்திய சக்திகளை, சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அதை ஈர்த்து, அழியாத தன்மையாக, இன்றும் நமது பூமிக்குள் படர்ந்து பரவிக் கொண்டிருக்கின்றது. 

அகஸ்தியர் தனக்குள் எத்தகைய தன்மை பெற்றாரோ, அந்தப் பேரண்டத்தின் உண்மை நிலையை, ஒவ்வொன்றும் பேரண்டத்தில் நிகழும் சக்திகள் அனைத்துமே, தனக்குள் உணர்ந்து அறிந்து, ஒளியாக ஒலி பரப்புகின்றார்.

இப்பொழுது மனிதனான பின், நாம் எந்தெந்த குணங்களின் தன்மையை எண்ணிப் பேசுகின்றோமோ, அதையே ஞாபகப்படுத்திப் பேசுகின்றோம். இதை போல, அகஸ்திய மாமகரிஷி விண்ணின் ஆற்றலின் தன்மையைத் தனக்குள் பெருக்கி, அந்த உணர்வின் ஆற்றலை உணர்ந்தறிந்து, இந்த உடலிலிருந்தே உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும், அந்த நிலையைப் பெற்றார். 

அவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த உண்மையின் நிலைகள் தான், இன்று அதன்பின் வந்த, மனித வர்க்கங்கள் அனைத்துமே, சந்தர்ப்பத்தால் அவர்களுக்குள் சிக்கப்பட்டு,  மனிதரின் வளர்ச்சியின் தன்மை பெறப்படுகின்றது.

அவ்வாறு பேரண்டத்தில் விளைந்த, பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய சூரிய குடும்பத்திற்குள், நம் பூமிக்குள் இருந்து மனிதனாகத் தோன்றினாலும்,
இந்த பிரபஞ்சத்திலிருக்கக் கூடிய உண்மை நிலைகளையறிந்து,
நம் பிரபஞ்சத்தைத் தாண்டி, மற்ற கோள்கள், மற்ற சூரிய குடும்பத்திலிருக்கக் கூடிய ஆற்றல்களையும் அறிந்துணர்ந்து, தன் உணர்வுக்குள் சேர்த்துக் கொண்டார்.

அதைச் சேர்த்து, உணர்ந்து, தனக்குள் ஞானச் சுடராக வளர்த்துக் கொண்டு, தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினார். அவ்வாறு ஒளியாக மாற்றப்படும் போது, தன் உடலில் உருபெற்ற எண்ண ஒலிகளை, ஒலி பரப்பிக் கொண்டேயிருக்கின்றார்..

இப்பொழுது நாம் டேப்ரிக்கார்டரில் பதிவு செய்த பிறகு, எப்படி மறுபடியும் ஒலி பரப்புகின்றோமோ, அதை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து கொள்கின்றது. இதெல்லாம் சக்தியற்றது, சீக்கிரம் அழிந்து போகக் கூடிய நிலைகள் பெற்றது.

ஆனால், அகஸ்தியர் ஒலி பரப்பிய உணர்வுகளும் சரி, மற்ற மெய்ஞானிகள் வெளிப்படுத்திய ஆற்றல் மிக்க சக்திகளும் சரி, அழிவதே இல்லை. இந்தக் காற்று மண்டலத்திலே தான், சுழன்று கொண்டு உள்ளது.

இன்று கோளாக இருந்த சக்தி,  தனக்குள்  வெப்பத்தின் ஆற்றலை , அதிகமாகக் கூட்டப்படும் பொழுது அந்த   வெப்பத்தின் ஆற்றலால், கோளுக்குள் இருக்கக் கூடிய உணர்வின் தன்மையும் பாறைகளும் உருகி, பல புது பொருள்களாக உருவாகி, ஆற்றல் மிக்க சக்திகளாக பெருகி, அது நட்சத்திரமாக, கதிரியக்க சக்தியாக மாறுகின்றதோ, இதை போன்று தான், அகஸ்திய மாமகரிஷி தன் சந்தர்ப்பத்தாலே, தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டார்.

தெற்கே தோன்றிய, தென்பகுதியிலே வெப்பத்தினாலான அந்த உணர்வின் தன்மை, அதாவது அந்த புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெறும்பொழுது, இப்பொழுது, எப்படி வெப்பங்கள், கோள்களுக்குள் வெப்பத்தை அதிகமாக கூட்டுகின்றதோ, அது கூடக்கூட நட்சத்திரமாக வளர்கின்றதோ,  இதை போன்றுதான், தென்பகுதியில் தோன்றிய அந்த மனிதனாக உரு பெற்றபின்,
தன் உணர்வின் ஆற்றலை,
தனக்குள் அந்த உணர்வின் ஆற்றல் பெருகிப் பெருகி,
தனக்குள் சூரியனின் காந்த சக்தியை அதிகமாகப் பெற்ற
அந்த மனித உணர்வின் சக்திதான்,
விண்ணிலே பிரபஞ்சத்திலிருக்க கூடிய
அனைத்து ஆற்றலையும் தனக்குள் கவர்ந்து,
அந்த உணர்வின் ஆற்றலை அறிந்து உணரக்கூடிய சக்தி பெற்று,
அதை தன் உடலுக்குள் விளையச் செய்து,
அதையும் ஆற்றல் மிக்கதாக மாற்றி,
பேரண்டத்துக்குள் எண்ணத்தைப் பாய்ச்சி,
எண்ணத்தாலே, மற்ற சூரிய குடும்பங்களில் இருந்தும், மற்ற உணர்வின் எண்ண ஒலிகளை, தனக்குள் பெருக்கி, தன் உணர்வின் சத்து அனைத்தையும், ஒளியாக மாற்றிச் சென்றார், தெற்கிலே தோன்றிய, அந்த அகஸ்திய மாமகரிஷி.

இதைத் தான் அன்று சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகும் பொழுது, பூமியின் நிலைகள் ஒரு பக்கம் சாயப்படும் போது, பூமி நிலைகுலைந்து போகும். அதனால், அகஸ்தியனை தெற்கே அனுப்பினார் என்று கதைகள் சொன்னார்கள். 

தெற்கே தோன்றிய, அந்த அணுவின் தன்மைதான்,
வெப்பத்தினாலான  அந்த உணர்வின் சக்தி,
தன்  வெப்பத்தின் ஆற்றல்  தனக்குள் கூடி,
இந்த பூமிக்கே  வெப்பத்தின் தன்மை கூடி,
அது பனிப்பாறைகளை உருக்கி கடலாகப் பெருகியது.

அதைப் போன்று, உயிரணுவாகத் தோன்றி, உணர்வின் சக்தியை தனக்குள் வளர்த்துக் கொண்ட, அது மனிதனாக வளர்ந்த பின், தன் உணர்வின் ஆற்றல் கொண்டு, இந்த பிரபஞ்சத்திலும், பேரண்டத்திலும் இருக்கக் கூடிய பேருண்மைகளை அறியும் சந்தர்ப்பம், முதன் முதலில் மனிதனின் உணர்வு பெற்றதன், இந்த உணர்வின் தன்மை வளர்ந்தபின், அந்த மனிதனில் விளையப் பெற்றது தான் அகஸ்தியர், அதாவது, அன்று அகத்துக்குள் அளந்தறிந்து, தான் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள்.

அவ்வாறு, அன்று மனித உணர்வுக்குள் சிவசக்தியின் தன்மை பெற்றுதான், அகஸ்தியரும் வளர்ச்சி பெறுகின்றார். ஆக, சிவனுக்கும் பார்வதிக்கும் எப்படி சிவத்தின் தன்மையும், சக்தியும், இரண்டும் இணைந்து ஒரு திடப்பொருள் ஆன பிற்பாடுதான், அது உருப் பெறுகின்றது.

அதைப் போல, அந்த உருப் பெறும் சக்தி தாய்மைக்குள் இருப்பதினால், அந்த தாய்மையின் சக்தியை தனக்குள் இணைத்து, தனக்குள் உருவின் தன்மை பெற்று, தன் உரு சக்தியைப் பெற்றபின், இந்த பூமிக்குள் வளர்ந்த நிலையை,  தென் பகுதியிலிருந்துதான், விண்ணின் வெப்பத்தின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து, சிவ சக்தியாக இயக்கப்படும் பூமியாக உருப்பெறுகின்றது.

அந்த உருபெறும் தன்மையைப் போல இந்த மனிதன் ஆகி, ஆக, அந்த அகஸ்தியன் என்ற நிலைகள் தான், துருவ மகரிஷியாகின்றார். அதாவது சிருஷ்டிக்கும் தன்மையாக, "என்றும் 16" என்ற நிலையை அடைகின்றார்.

ஆக, இந்த மனித உடலை விட்டு, தனக்குள் ஒளி சரீரம் பெறப்போகும் பொழுது, என்றும் இளமை பருவமாக வளரும் சக்தியாக, துருவ நட்சத்திரமாக, இந்த உடலை விட்டுப் பிரிந்தபின், அந்த அகஸ்திய மாமகரிஷி, அந்த உணர்வின் சத்தான உயிரான்மா, துருவ நட்சத்திரமாகச் சென்றுள்ளார்.
இந்தப் பூமியின் வடபகுதியிலே,
இன்று பூமி எவ்வாறு பிரபஞ்சத்திலிருந்து
தனக்குள் பூமியின் சுழற்சியின் ஈர்ப்புக்குள்
பல சக்திகளை பூமிக்குள் ஈர்த்து எடுத்துக் கொள்கின்றதோ,
அப்பகுதியில் தான் இன்றும் நிலைகொண்டு,
விண்வெளியிலிருந்து, பூமி இருக்கும் பகுதியிலே நின்றுதான்ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்து, துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்.

ஆகவே, நாம் அனைவரும் அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நுகர்ந்து, அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து, உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி, அவன் சென்ற எல்லையை நாமும் அடைவோம், எமது அருளாசிகள்.

(பக்கம் 82-85)
தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்ற பாடலின் உண்மைத் தத்துவம்
தென்னாட்டிலே தோன்றிய அகஸ்திய மகரிஷி, பேரண்டத்தின் உண்மை நிலைகளை, அதாவது, ஆதிசக்தியின் ஆற்றல்கள் கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாகி, சூரிய குடும்பத்திற்குள் கோள்களாகி, கோள்கள் நட்சத்திரமாகி, பிரபஞ்சமாகி, அந்த பிரபஞ்சத்திற்குள் தோன்றிய கோள்களுக்கு, தாவர இனச் சத்தாகி, நம் பூமிக்குள் தாவர இன சத்தை, ஒரு உயிரணு, அந்த உணர்வின் சத்தை தனக்குள் எடுத்து, புழுவின் தன்மை அடைந்து, புழுவிலிருந்து மனிதன் வரை தோன்றியது.

ஆக, இவ்வாறு தோன்றியது அனைத்தும்  ஆரம்பக் காலங்களிலிருந்து,  சந்தர்ப்பத்தின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொன்றும் உருபெறுகின்றது. 

ஒன்றுக்கு ஒன்று சந்தர்ப்பத்தால் மோதும் நிகழ்ச்சிகளில் தான், ஒன்றுக்குள் ஒன்று விழுங்கி, ஒன்றின் சக்தி ஒன்றுக்குள் பெருகி, ஒன்றின் நிலைகள் வளர்ந்தது.

அவ்வாறு வளர்ந்து வந்த அந்த சக்தி, பூமிக்குள் வந்த உயிரணு, புழுவிலிருந்து மனிதனாக பல உயிரினங்களின் தோற்றமாக ஆனாலும், அதிலே, முன்னனியிலே மனிதனாக உருவாக்கிய அவருடைய சந்தர்ப்பம், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் அறிந்துணர்ந்து எடுக்கும் ஆற்றல்மிக்க சக்தியாகப் பெற்றார், அகஸ்திய மாமகரிஷி.

தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை, மனித உடலான பின், மனித உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்துமே ஒளியாக மாற்றி, விண்ணின் ஆற்றல் எவ்வாறு தனக்குள் பெற்றதோ சூரியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலை தனக்குள் ஒளியாகப் பெற்றதோ ஒளி சரீரமாக மனிதனாகி, ஒரு உயிரணு, அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகப் பெற்றபின், தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி, தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளை,
இந்த உலகம், இந்த பூமி, இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது?
எவ்வாறு ஒளியானது?, வெளியானது?
என்பதை வெளிப்படுத்திய ஒலி அலைகள், நம் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதும், அதே சமயம் அந்த உயிரின் ஆத்மா, ஒளி சரீரமாக நின்று, துருவ நட்சத்திரமாக நின்று, வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் அலைகளைத் தான், தென்னாடுடைய சிவனே போற்றி என்று உணர்த்தப்பட்டது.

ஆக, தென்னாட்டுக்குள் இந்த மனித உடலான சிவத்துக்குள், பேரண்டத்தின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்து, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி வெளிப்படுத்திய, அந்த உணர்வின் தன்மைத் தான், அகஸ்திய மாமகரிஷி காட்டிய வழிப்படி, அவர் அருள் நெறிப்படி, அவர் வழிகளிலே சென்று, அவர்கள் வெளிப்படுத்தி உபதேசித்து உணர்த்திய அந்த அருள் சக்தியை, எந்நாட்டவரும் நுகர்ந்து, தாம் சுவாசிக்கும் போது, அந்த சுவாசித்த உணர்வின் சக்தி, அவர்களுக்குள் இறையாகி, இந்த இறையின் சக்தியின் உணர்வின் ஆற்றலை, பேரண்டத்தின் உண்மையைப் பெறும் பாக்கியமாக, அது பெறமுடியும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்கள், அதன் உட்பொருளே இதுதான்.

ஆக தென்னாட்டிலே தோன்றிய காரணம், 
தென்னாட்டிலே வெப்பம் அதிகம். 
அந்த உணர்வின் தன்மையிலே, தான் வளர்ந்து, இந்த பூமிக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் உணர்வின் ஆற்றல், தென்னாட்டிலே தோன்றியது,  என்று காட்டுவதற்குத் தான் அதை உணர்த்தினார்கள்.

எந்நாட்டவரும் அவர்கள் எடுக்கப்படும் பொழுது, அது இறையாக அமைந்து, உணர்வின் சக்தியாக வளர்க்கப்படுகிறது. அந்த நிலைகளுக்கு அனைவரும் செல்லலாம். அந்த உணர்வை, தென்னாட்டிலே உள்ள நாம் அனைவரும் பெறத் தகுதி பெற்றவர்கள்தான்.

ஆக, தென்னாடான இந்நாட்டில் அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஆற்றல் படர்ந்து கொண்டிருப்பதும், அவர் வாழ்ந்த காலத்தில்,  இந்நாட்டில் அவருடைய பாத அலைகள், அவர் உடலின் உணர்வலைகள் படர்ந்துள்ளது.

ஆங்காங்கு, எங்கெங்கெல்லாம் அவர் சென்று தங்கி, மெய்யுணர்வின் தன்மையை தான் பெறவேண்டுமென்று இந்த பூமி முழுவதற்கும் சென்றவர்தான். இந்த பூமிக்குள் அனைத்து இடங்களிலும், தென்துருவம் வடதுருவம் அனைத்தும் சென்று வந்தவர்தான்.

அதிலே தென்னாட்டிலே தோன்றிய இந்த மனிதன் தான், தனக்குள் உணரும் ஆற்றலைப் பெருக்கி, அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று அவர் உணர்வின் ஆற்றலை பரப்பினார்.

ஆரம்பத்தில், இந்த பூமியின் தன்மை  பிரபஞ்சத்திலிருந்து. தான் ஈர்க்கும் அனைத்து சக்திகளும், வடதுருவத்தில் குவியப்படும்போது, அது குவிந்து, பூமியின் தன்மை சிவ சக்தியாக, பார்வதி பரமேஸ்வரன் கல்யாணம் என்று
இரண்டும் இணைந்து சக்தியாக,
பல உணர்வின் சக்தி, ஒன்று சேர்த்து
ஒரு சிவமாக இருக்கக் கூடிய அந்த நிலையைத் தான்
கல்யாணமாகும் போது, தெற்கே அகஸ்தியரை
சிவன் அனுப்பினான் என்று
தெற்கே தோன்றிய, அந்த அணுவின்  வெப்ப அணுக்கள் தான், இந்த பூமிக்குள் வெப்பமாகி - வடதுருவத்துக்குள் பூமிக்குள்  வெப்பத்தை அதிகமாகக் கூட்டி வளர்ந்து அந்த அணுவின் தன்மை, அந்த வடதுருவத்தின் தன்மையை நீராக மாற்றியது.

அதே போன்று, அந்த தென் பகுதியிலே தோன்றிய அந்த அணுவான அந்த சக்தி, அது உயிரணுவாகத் தோன்றி, அது வளர்ச்சி பெறும் தகுதியைப் பெற்றபின், எப்படி நீர் சக்தி இந்த பூமிக்கு முக்கியமாக அமைந்ததோ, அதைப் போன்று, அகஸ்திய மாமகரிஷி பேரண்டத்தின் உணர்வின் சக்தியை, தமக்குள் வளர்த்து இந்த பூமியின் அனைத்து இடங்களிலும் மனிதன் என்ற உணர்வின் ஆற்றலை, அதாவது, மெய் ஒளியாகப் பெறும் ஞானத்தின் ஒளிச் சுடராக, இந்த பூமி முழுவதற்கும் படரச் செய்து, இந்த பூமிக்குள் மனித உருவின் நிலையும், மனிதனுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கும் தன்மையை, அது வெளிப்படுத்தி, அந்த உணர்வின் அலைகள் இருப்பதனால்தான், இன்று பூமிக்குள் மற்ற மனிதர்கள் சிந்தித்து, அதனதன் வழிகளில் செல்லப்படும் பொழுது,
ஆதிமுதல்,
ஆதி மனிதனாக,
ஆற்றல்மிக்க மனிதனாக,
ஆதிசக்தியாக,
ஆதிசக்தியின் உணர்வாக வளர்ந்தவர், அகஸ்திய மாமகரிஷி.
ஒரு அணுவுக்குள் இயக்கும், உணர்வின் ஆற்றலின் தன்மையை வெளிபடுத்திய, அந்த உணர்வின் ஆற்றலைத்தான்   அகஸ்தியன்  என்றது.

அதனால்தான்,  அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை மிகக் குறுகிய உடலாகப் போட்டு,  உடல் குறுகி இருந்தாலும்,  உணர்வின் ஆற்றல், பேரண்டத்தில் எட்டித் தாவும் நிலைகள். 

ஒரு அணுவின் தன்மை சிறியதாக இருந்தாலும், யானை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது சுவாசிக்கும் உணர்வின் அணு சிறியது தான். ஆனால், சுவாசித்த உணர்வின் அணுவின் தன்மை, பெரிய யானையின் உடலையும், அது இயக்குகின்றது.

இதை  போலத்தான், அகஸ்தியருடைய ஆற்றல், அவருடைய எண்ணத்தின் அலைகள். அவருடைய உடலின் தன்மைகள் குறுகியிருந்தாலும், பேரண்டத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பெருக்கி, ஒளியின் சரீரமாக, அதைப் பெருக்கிய நிலைகள் கொண்டுதான், அன்று அந்த அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை அமைத்து, பின்னால் வந்த ஞானியர்கள் அதை உணர்த்தி சென்றார்கள்.

ஆகவே,  நாம் அனைவரும், அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோமாக, எமது அருளாசிகள்.
(பக்கம் 78-80)

அகஸ்திய மாமகரிஷி, தனக்குள் தன் உணர்வின் ஆற்றல் பெற்று, விண்ணிலே சென்றபின், அங்கிருந்து வெளிப்படும் அலைகள் வானிலே மிதந்து கொண்டிருக்கின்றது. பிரபஞ்சத்துக்குள் மிதந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த உணர்வின் சக்தியை நாம் நினைவு கொள்ளும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தி, அன்று அகஸ்திய மாமகரிஷி மனிதனாக வாழ்ந்த காலத்தில், அவர் உடலில் விளைவித்த மூச்சின் உணர்வு அலைகள், எண்ண ஒலிகளாக ஒலிபரப்பப்பட்டிருக்கின்றது, அதை நாம் அனைவரும் பெற முடியும்.

இப்பொழுது நாம் எந்த குணத்தை எண்ணிப் பேசுகின்றோமோ, இதைப் போன்று, 
அகஸ்திய மாமகரிஷி தன் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை,
வெளிப்படுத்திய நிலையும்,
வளர்ந்த நிலையும்,
தான் வளர்ந்து கொண்ட நிலையும்,
வளரவேண்டிய நிலையும்,
தன் உணர்வாற்றலால் வெளிப்படுத்திய அந்த நிலைகள், இங்கே பரவிக் கொண்டிருக்கின்றது. 

அந்த வளர்ந்த நிலை, வளரவேண்டிய நிலை, இவை அனைத்துமே எவ்வாறு?  என்ற நிலைகளைத் தான், விநாயக தத்துவத்தில், கேள்விக் குறியாக விநாயகனை வைத்துச் சென்றார்கள்.

விநாயகனைப் பார்க்கும் பொழுது, மேற்கே பார்த்து, இந்த விநாயகனை வைத்திருக்கும் - நீர் நிலை இருக்கும் பக்கம்தான், ஏனென்றால், அது ஜீவநீர், ஆக அந்த ஜீவநீர் நிலைகள் பக்கம் அதை நிலை நிறுத்தி, நாம் நீரிலே மூழ்கி வந்தபின், இந்த விநாயகரைப் பார்த்ததும், நம் கண்ணுக்குள், இந்த கதையாக உணர்த்திய, நினைவலைகள் வருகின்றது.

நாம் இந்த உடலை, மிருகத்திலிருந்து மனிதனாகப் பெற்றோம், என்ற உண்மையை உணர்த்திய அந்த மகரிஷி,  துருவ மகரிஷியின் எண்ணத்தை நாம் எண்ணி, வானை நோக்கி எண்ணும் பொழுது, அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகி, அந்த சூரியனின் கதிர் அலைகள் நமக்குள் காந்த அலைகளாகப் பட்டபின், அந்த உணர்வின் அலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு, எந்த மகரிஷி உணர்த்தினாரோ, அவரின் உணர்வின் ஆற்றல் பெறும் நிலைகள் பெறப்படுகின்றது.

அப்பொழுது, அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய அந்த உணர்வின் ஆற்றல், அவர் வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள், இந்த பூமியிலே மிதந்து கொண்டிருப்பதினால், அந்த உணர்வின் ஆற்றல் ஈர்க்கப்படுகின்றது. அப்பொழுது அந்த சந்தர்ப்பம், நமக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையை நாம் பெறக்கூடிய நிலையை, அங்கே பெற முடிகின்றது.

ஆக, எந்த மனிதன் (அகஸ்திய மாமகரிஷி) தன் ஒளியின் தன்மையிலே சென்றானோ, அவன் வழியைத் தான் உணர்த்தியிருக்கின்றான். 

அவன் வழியை நாம் பின்பற்றி செல்லும் பொழுது, அவன் சென்ற இடமே, நாம் போய்ச் சேரமுடியும்.

நாம் அனைவரும், அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் அருள் வாழ்க்கை வாழ்ந்து, இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை என்னும் நிலையாக அழியா ஒளிசரீரம் பெற்று, மகிழ்ந்து  வாழ்ந்து, என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம், எமது அருளாசிகள்.
talakaveri21.jpg