ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2013

தண்டாயுதபாணி - நிராயுதம்

அவன் ஆண்டி நீ பார்க்காதே, கோவணத்தோடு பார்த்தால் உனக்குச் சோறு கிடைக்காது ஆகையினாலே ஆண்டி வேஷம் போட்டிருக்கும் பொழுது போய்ப் பார்த்தால், இங்கு தொழில் போய்விடும்.

ஆண்டி வேஷம் போட்டிருந்ததைப் பார்த்தால் இங்கு தொழில் போய்விடுமாம். அதற்காக வேண்டி, இராஜவேஷம் எப்பொழுதோ அப்பொழுது மலைக்குப் போவார்கள். இது மாதிரியெல்லாம், நம்மை அறியாமலே நமக்குள் ஆசையை வளர்த்துள்ளார்கள்.

தண்டபாணி என்கிறபோது இந்த உடலின் வாழ்க்கையின் நிலைகளை தண்டாயுதபாணி என்று, சிலையில் கோவணாண்டியாகக் காட்டினார்கள்.

அதாவது, ஆசை, கோபம், வெறுப்பு இத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து, இந்த உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை கொடுக்கப்படும் பொழுது, “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்” என்ற நிலை ஏற்படுகின்றது.

இந்த மாதிரி, இன்னொரு உடலுக்குள் முற்றிடும் உணர்வை
நம் உடலுக்குள் சுவாசிக்கக் கூடாது. அதாவது,
நமக்குள் எடுக்க வேண்டிய ஆயுதம் – “நிராயுதம்”.

நிராயுதமாக, இந்த “உடலுக்குள் உண்டான எண்ணங்களை” எடுக்கக்கூடாது என்பதற்குத்தான் தண்டாயுதபாணியாக வைத்துள்ளார்கள்.

ஆக, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுத்து, அதைச் சுவாசித்து நமக்குள் “ஊன்றுகோலாக” வைக்க வேண்டும்.
அதன் வழியில், நமக்குள் வரும் தீமைகளை
தடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்
அப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.