ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2013

எல்லை கடந்த துன்பத்தில் வருபவர்களுக்கு யாம் பெறச் செய்யும் ஆற்றல்கள்

1.நீங்கள் எல்லை கடந்து துன்பத்தில் வரப்படும் பொழுது,
2.அதை உடனடியாக நீக்கச் செய்வதற்கு,
3.மெய் ஞானியின் அருள் உணர்வின் சக்தியை உங்களுக்குள் ஊடுருவச் செய்யும்போது தான்,
4.அந்தச் சந்தர்ப்பத்திl அந்த ஆற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு வருகின்றது.

அருணகிரிநாதரோ, இராமலிங்க அடிகளோ, வியாசகரோ இவர்களெல்லாம் சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொண்டவர்கள் தான். போகமாமகரிஷியும் இதேபோன்றுதான். ஆக இவர்களெல்லாம் சந்தர்ப்பத்தால் தான், மெய்ஒளியின் தன்மையைப் பெற்று வந்தார்கள்.

சந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது, நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள், நம்மை மறந்து, துன்பத்தை மறந்து நாம் மெய் ஒளியின் தன்மை பெறவேண்டுமென்று, தியானத்தின் வழி நாம் கூட்டும் இந்த உணர்வின் ஆற்றல், அதை நாம் பெருக்கப்படும்போது, விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.  

ஆகவே,  நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக்கொள்வோம். ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும், மெய்ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை, ஒவ்வொரு நாளும் ஒரு  பத்து  நிமிடமாவது, மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறவேண்டும் என்று தியானிப்போம்.

தியானித்து, அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டி, அதை நம் உடலிலே சேர்த்துக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் நமக்குத் துன்பம் வரும்போது ஈஸ்வராஎன்ற எண்ணத்தைக் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், அதை ங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று நாம் எண்ணிச் சுவாசித்து, நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம், எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு, நம் உணர்ச்சிகளைத் தூண்டி,
1.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே, 
2.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி
3.நாம் விண்ணின் ஆற்றலை மிக ஆற்றல் மிக்க நிலைகளை,
4.“துரித நிலையில் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
               
ஆக இதைப்போன்றுதான் நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டு பழகி வரப்படும்பொழுது,
1.எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோபயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ
2.இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம்,
3.அடுத்தகணம், நாம் ஆத்ம சுத்தி செய்து,
4.நம் உடலில் வரக்கூடிய துன்பங்களை
5.நாம் துடைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.