ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2014

தசரதரிடம் கைகேயி கேட்ட வரங்கள் - இராமாயணம் காட்டும் விளக்கம்

1. நமது உயிருக்குப் பெயர்தான் தசரத சக்கரவர்த்தி
தசரதச் சக்கரவர்த்தி என்பது எது?  பத்தாவது நிலையை அடையக்கூடிய, மனித உடலை உருவாக்கிய உயிருக்குப் பெயர்தான் தசரதச் சக்கரவர்த்தி.  

உதாரணமாக, தசரதச் சக்கரவர்த்தி தாம் மூன்று நாட்டையும் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கொள்கினறார். இந்த சிந்தனை உருவாகின்றது. அதன் வழிப்படி அவர் திட்டமிடுகின்றார்.

உணர்வின் தன்மையின, அணுவாகப் பெருக்கிக் கொள்கின்றார். அதன் ஞானம் வருகின்றது. அதன் வழி வியூகத்தை வகுத்து, இந்த நாட்டை எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்ற உணர்வின் போர் முறைக்குச் செல்கின்றார்.

எதன் சக்தியைத் தன்னுள் இணைத்துக் கொண்டாரோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, தன்னுள் இணைந்த சக்தியை இயக்கச் செய்து மூன்று நாட்டையும் வெல்கின்றார்.

அப்படி மூன்று நாட்டையும் வென்ற பின்,
வெற்றி பெற்ற உணர்வு தன்னுள் இருப்பதனால்,
நாம் புரிந்து கொள்வதற்காக,
என்னை வெற்றி பெறச் செய்தாய்,
உனக்கு என்ன வரம் வேண்டும்?
இரண்டு வரத்தைக் கேள்,
என்று தசரதச் சக்கரவர்த்தி தனது மனைவி கைகேயியிடம் கேட்பதாக இராமாயணக் காவியம் கூறுகின்றது.

என்ன வரம் வேண்டும்? என்று தசரதச் சக்கரவர்த்தி கேட்கின்றார்.

நான் சமயம் வரும் பொழுது கேட்கின்றேன்என்று கைகேயியிடமிருந்து பதில் வருகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், உடனே விளைந்துவிடுமா? செடி தோன்றி வளர்ந்து, பூ பூத்து, அதன்பின் தான் காய் காய்க்கும். 

ஆகவே தசரதச் சக்கரவர்த்தியின் உடலுக்குள், தான் வெற்றி பெற்றதற்கான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, அவருடைய உடலில் இதன் உணர்வின் தன்மை முழுமை அடைகின்றது.
2. பிறரை வேதனைப்படுத்தி ஜெயித்த உணர்வு தான் கைகேயி
உதாரணமாக நமது உடலில் கோபம் என்ற உணர்வின் தன்மையை உருவாக்கிவிட்டால், கார உணர்ச்சி கொண்ட அணுவாக உருவாகின்றது. அணுத் தன்மை அடைந்தபின், அது தன் சக்தியாக இயக்கிக் கொண்டு தன் இனத்தின் தன்மையைப் பெருக்குகின்றது. 

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அது செடியாகி தன் வித்துகளை எப்படி உருவாக்குகின்றதோஇதைப் போன்று
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு,
எண்ணிய உணர்வு இவருடைய உடலுக்குள் வந்து,
தன் இனமான குழந்தைகளாக உருவாக்கி விடுகின்றது.

பிறரை, வேதனைப்படுத்தி செயல்பட்டதுதான் கைகேயி”. ஆகவே, பிறரைத் துன்புறுத்தும் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, நாளடைவில் அதன் உணர்வின் எண்ணங்கள் அதிகரித்து அதிகரித்து, தன் உணர்வின் தன்மை வலுவாகின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் தருணம் வருகின்றது. எல்லோரும் அதற்கான காரியங்களைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் கைகேயி, இராமனுக்குப் பட்டம் சூட்டிவிட்டால் தான் வேலைக்காரியாகி விடுவேன் என்று எண்ணுகின்றார். அதாவது
மற்றொன்றின் மீது போர் தன்மை கொண்டு,
வெற்றி பெறச் செய்த உணர்வுகளின்,
உணர்ச்சியின் தன்மை
இந்த உடலுக்குள் நின்று எப்படிச் செயல்படுகின்றது?
என்ற நிலையைத்தான் காட்டுகின்றார்கள்.

தசரத க்கரவர்த்தியின் உடலில் பத்தாவது நிலையை அடையப்படும் பொழுது, இவருடைய உடலில் இருந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி செயல்படுகின்றது என்பதை தெளிவாகக் காண்பிக்கின்றார்கள்.

அது சமயம், தசரதச் சக்கரவர்த்தி இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும், செய்து விடுகின்றார். இதுதான் தருணம் என்று கைகேயி தசரதச் சக்கரவர்த்தியிடம், “போர் காலத்தில் இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னீர்கள் அல்லவா? அந்த இரண்டு வரங்களை இப்பொழுது தருவீர்களாஎன்று கேட்கின்றார்.
3. நாம் நுகர்ந்த தீய உணர்வுகள், நல்லதைத் தேர்ந்தெடுக்க முடியாதபடி எப்படி நம்மைத் தடுக்கின்றது?
கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எண்ணுகின்றார். தன் மகன் என்றால்,
மற்ற போர் முறைகளில் வென்ற உணர்வுகள். 
அது இவ்வுடலில் என்ன செய்யும்? 

தனது கை ஓங்கி இருக்க வேண்டும் என்ற நிலையைச் செய்யும். 

உணர்வின் உணர்ச்சிகள் எண்ணமாகி, எதன் உணர்ச்சிகள் உடலில்  உருவாகின்றதோ அதன் தொடர் கொண்டு, நமது உடலில் எத்தனை போர் முறைகள் நடக்கின்றது?

தீமையின் உணர்வுகள், நல்ல குங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது என்பதைத்  தெளிவாகக் உணர்த்துகின்றது இராமாயணம்.

கைகேயி, “வரங்களைத் தாருங்கள்என்று கேட்டபின், தசரதச் சக்கரவர்த்தி, “தாரளமாகக் கேள், உனக்கில்லாததா?” என்று சொல்லுகின்றார்.

தொடர்ந்து கைகேயி கேட்ட வரங்கள், “இராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும், பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்என்பது.

ஆகவே, ன்றைக்குப் போர் முறைகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்த நிலைகளால், தன் உடலுக்குள் நல்லவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி.

பத்தாவது நிலை அடையக் கூடியவர்,
மற்றதை வேதனைப்படுத்திஜெயித்தபின்,
"தான் நிகரில்லாதவன்" என்ற நிலைகளை எண்ணினாலும்,
உடலுக்குள் தீய வினைகள் வந்து, நல்லதைச் செய்யவிடாதபடி எப்படித் தடுக்கின்றது? என்பதை இங்கே உணர்த்துகின்றது இராமாயணக் காவியம்.

உதாரணமாக, நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், தீய உணர்வுகள் உங்கள் உடலில் எப்படி நோயை உருவாக்குகின்றது?

பத்தாவது நிலையை அடையும் நம் உயிர் எல்லாவற்றையும் ஆட்சி புரியும் நிலை வந்தாலும், நமக்குள் தீய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை இராமாயணக் காவியம் தெளிவாக உணர்த்துகின்றது.

சட்டப்படி, நான் முதலில் மூத்தவனுக்குப் பட்டம் சூட்டவேண்டும் என்று எண்ணினேன். நீ இடைமறித்து பரதனுக்குப் பட்டம் சூட்ட எண்ணுகின்றாய், பரவாயில்லை.

ஆனால், “நீ நல்லவனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்லுகின்றாயே? இது உனக்குத் தகுமா?” என்று கைகேயியிடம் தசரதச் சக்கரவர்த்தி கேட்கின்றார்.

உடனே கைகேயி, “சட்டப்படி மூத்தவன் இருக்கும் பொழுது, இளையவனுக்குப் பட்டம் சூட்ட முடியாது, ஆகவே, இராமன் துறவறம் பூண்டால்தான் பரதனுக்குப் பட்டம் சூட்ட முடியும். அதனால்தான் சொல்கின்றேன், பரதனுக்குப் பட்டம் சூட்டினால்தான்
நான் அரசியாக இருக்க முடியும்,
இல்லையென்றால், வேலைக்காரியாகத்தான் இருக்கமுடியும்”.

போர்க்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தேனே, எதற்கு? நான் வேலைக்காரியாக இருப்பதற்காகவா?" என்பது போன்ற வினாக்களை கைகேயி எழுப்புகின்றார்.

அதாவதுவிஷ உணர்வுகளை எடுத்துக் கொண்டால் என்னவாகும்? என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

இதனால், வேதனை உணர்வை நுகர்ந்த தசரதச் சக்கரவர்த்தியின் நிலை என்னவென்றால், “இப்படி ஆகிவிட்டதே, நல்லவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையேஎன்று எண்ணுகின்றார்.
எத்தனை பேரை வேதனைப்படுத்தி சாம்ராஜ்யத்தைப் பிடித்தாரோ,
அதே வேதனை அவருக்குள் வருகின்றது

போர் முறைகளில் வெற்றி பெறும் பொழுது, ரசித்தார். ஆனால், உடலில் ஆட்சி புரியும் தன்மை வரப்படும் பொழுது, நல்லவைகளை ஒதுக்கி, தீமைகளை எப்படி வளர்க்கின்றது என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
4. தீமைகளைக் காணும்பொழுதெல்லாம் தடுக்க என்ன செய்யவேண்டும்?
ஆகவே, பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்ற நாம், இந்த வாழ்க்கையில்
தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
உடனுக்குடன் நமக்குள் சேர்த்து,
தீயவினைகள் நமக்குள் வளராமல் தடுக்கவேண்டும்,

இந்தப் பிறவியில், பிறவி இல்லா நிலை அடையும், அருள் வாழ்க்கை வாழ்வோம். அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அடைவோம். எமது அருளாசிகள்.

March 29, 2014

கணவன் மனைவி இரு உயிராத்மாக்களும் ஒரே உயிராத்மாவாக ஆனால் “சப்தரிஷி மண்டலம்”

கணவன் மனைவி இருவரும், ஒருவருக்கொருவர் நமது குருநாதர் காட்டிய அருள்வழியில் ஆத்ம சுத்தி செய்து கொண்டு இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது, சரீரங்கள் இரண்டாக இருந்தாலும், பெண்களுக்குண்டான அமில சக்திகள் அதிகம். ஆக, இருவருமே அடிக்கடி அந்த எண்ணங்கள் கொண்டு இருந்தால் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற முடிகின்றது.

ஆக, இந்த உடலை விட்டு இவர்களது உயிராத்மாக்கள் சென்றாலும, ஒரே சரீரமாக அங்கே இயங்கி,  அதாவது, ரிஷி சக்தியின் தன்மையில் ஒரு கோளாக, ஒரு நட்சத்திரமாக இயங்கி,  பேரண்டத்தையும் தனக்குள் சிருஷ்டிக்க முடியும்.

இன்று ஒரு பிரபஞ்சத்தை சூரியன் எப்படி ஆட்டிப்படைக்கின்றதோ, அதைப் போல,
ணவன் மனைவியினுடைய இரு உயிராத்மாக்களும்
ஒரே உயிராத்மாவாக ஆகும் பொழுதுதான்,
அந்த ரிஷியின் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது.
அதுதான் “சப்தரிஷி மண்டலம்” என்பது.

ஆக, பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை இப்பொழுது எப்படி நட்சத்திரங்களிலிருந்து பல அலைகள் தெரிகின்றதோ, இதைப் போன்று வெளிப்படும் உணர்வலைகள் மண்டலங்களாகச் சுழன்று கொண்டு, புறத்திலிருந்து வரக்கூடிய பல உணர்வின் ஆற்றல்களை அது மாய்த்து, அதற்குள் நின்று, தனக்குள் பாதுகாப்பான நிலைகளை அது செயல்படுத்தும் அந்த சப்தரிஷி மண்டலம்.

மனிதர்களாக இருக்கக்கூடியவர்கள் கோபமான உணர்வைச் செலுத்திவிட்டால், இந்த உணர்வலைகள்  நம் ஆத்மாவின் முன் நின்று, அந்த குணத்தின் தன்மையைக் காக்க அந்த உணர்வைச் சுவாசித்து, அந்த உணர்வு கொண்டே நாம் செயல்படுகின்றோம்.

இதைப் போன்றுதான், ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த மணம் அந்த மரத்திற்கு முன்பு அதிகமாக வரும்போது, கசப்பின் தன்மையைத் தவிர மற்ற அலைகளைத் தனக்குள் வராதபடி பாதுகாப்பாக வளர்த்துக் கொள்கின்றது.

இதைப்போன்றுதான்,
கணவன் மனைவி இரு சரீரமும் ஒரு சரீரமாக ஆக்கப்படும்போது,
சப்தரிஷி மண்டலங்களாகச் செயல்படும்போது,
இந்த உணர்வுகள் பாசத்துடன் ஒரே குடும்பமாக, ஒரே எண்ணமாக அது வளர்ச்சி பெறும் நிலைகள் வருகின்றது.

அப்படி இரு சரீரங்களும் ஒன்று சேர்ந்து, தான் எடுத்துக் கொள்ளும் இந்த உணர்வலைகள் தனக்குள் ஆத்மாவாகப் படைக்கச் செய்து, விண்ணிலிருந்து வரும் ஆற்றலின் தன்மையை அணு சக்தியாக மாற்றி, தன் உணர்வின் ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றது.

அதனின் கூட்டுக்குள், (சப்தரிஷி மண்டலக் கூட்டிற்குள்) எப்படி ஒரு சூரிய குடும்பம், ஒரு பிரபஞ்சமாகத் தோன்றி அகண்ட நிலைகள் பெற்றதோ, இதைப் போன்று
நம் உயிராத்மா விண்ணிலே வரக்கூடிய
உணர்வின் ஆற்றல்மிக்க தன்மையை,
தனக்குள் பிரபஞ்சமாக அமைத்துக் கொண்டு,
விண்ணின் ஆற்றலை நுண் அணுக்களாக மாற்றி,
அந்த அணுவிற்குள் அணுவாக நின்று ஆற்றல்மிக்க சக்தியாக, 
என்றும் பதினாறு  என்ற நிலையான நிலையை
நாம் அனைவரும் பெறமுடியும். எமது அருளாசிகள்.