ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2015

சப்தரிஷி மண்டலத்தின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கும்?

உடலை விட்டு நாம் சப்தரிஷி மண்டலத்திற்குச் சென்ற பின்பு, நமக்கு நம்முடைய உறவினர்களையோ, நண்பர்களையோ தியானவழி மெம்பர்களையோ இவர்கள்தான் என்று நாம் அறிந்து கொள்ள முடியுமா?

நம்முடைய நண்பர்கள் மட்டுமன்றி முன்னோர்கள் மூதாதையர்களையும் அறிந்து கொள்ள முடியுமா? தவிர, நம்முடைய வாரிசுகளுக்கு நம்முடைய செய்திகளை அனுப்ப முடியுமா?

அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. இந்த 27 நட்சத்திரத்தின் ஈர்ப்பு, அதாவது ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் அதன் துகள்கள் வரப்படும்போது சூரியன் தன் உணவுக்காகக் கவர்கின்றது.

இடைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனுடைய மாற்றங்கள் ஆகின்றது. வரும் பாதையில் இதனுடைய கார்த்திகை நட்சத்திரத்தினுடைய சக்தி அதிகம் வலிமை பெற்றது – ஆண்பால்.

இப்பொழுது ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்லுகின்றதோ இதைப்போல ரேவதி நட்சத்திரத்தின் அலைகள் இருப்பினும் கார்த்திகை நட்சத்திரம் இதன் உணர்வின் அழுத்தம் அதிகமானபின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வின் அலைகள் இது விலகிச் செல்லுகின்றது.

விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் இந்த ஆவியின் தன்மைகள் ஊடுருவி விட்டால், அதன் சுழற்சியின் வேகம் அதிகம்.

ஆக, அந்த சுழற்சியின் வேகம் அதிகமாகப் போகும்போது இதன் அருகே வந்து அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வு இழுத்து இரண்டும் மோதிவிடும்.

இப்படி மோதிவிட்டால் ஆண் பெண் என்ற உணர்வுகளில் அதாவது ரேவதி நட்சத்திரத்தின் உணர்வு அதிகமானால் பெண்பால்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வு அதிகமானால் ஆண்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

ஆண் பெண் என்ற நிலைகள் தான்
நம் உயிரிலே இயக்குகின்றது.
கணவனும் மனைவியும் ஒத்த மனம் கொண்டு அது இயக்கினால், எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது.

இன்று நாம் இங்கிருந்து சென்றபின் ஒவ்வொரு நட்சத்திரம் ஒவ்வொன்று தான். இதிலே தெளிவாக்கி
உணர்வின் தன்மை தீமைகளை நீக்கி
உணர்வை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடல் பெற்றபின்
ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றது. சப்தரிஷி
அதைத்தான் சிருஷ்டித்து கொண்டது என்று சொல்வார்கள்.

தீமைகளை, பகைமைகளை, நஞ்சினை நமக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் இந்த மனித உடலில் பெற்றதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் கவர்ந்து அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லுகின்றோம்.

அப்பொழுது, நம் நண்பனாக இருந்தாலும் நாம் துருவ நட்சத்திரத்தின் இணைப்போடு வாழ்ந்தால் அறிந்து கொள்ளும் உணர்வில்லை.

ஆனால், ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும். ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை அது கவர்ந்து வாழும் தன்மை வருகின்றது.

நமது பிரபஞ்சம் பிற தன்மைகளை எடுக்கும்போது நமது சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப்போலத்தான் நாம் சப்தரிஷி மண்டலங்களில் இருக்கப்படும்போது அறிந்திடும் நிலையாகும். இருளை அகற்றிடும் வலிமை பெறும். ஆக என்றும் ஏழாவது நிலை பெறும்.

நாம் சப்தரிஷி மண்டல உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்ந்தால் பகைமை என்ற உணர்வை அகற்றி சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

இதுதான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணின் அபிமான புத்திரன் நாரதன் என்பது. ஆகவே, தான் சிருஷ்டித்துக் கொண்டதுதான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி
உணர்வை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம்.

அதைப் பின்பற்றிய அனைவரும் ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷிகள், சிருஷ்டித்துக் கொண்டவர்கள் என்று பொருள். அதாவது உணர்வை ஒளியாக மாற்றியவர்கள்.

வேப்ப மரத்தின் கசப்பான உணர்வுகளை நாம் நுகர்ந்தவுடன் என்னவாகின்றது? ஓய்.., என்று வெளியே வருகின்றது.

ரோஜாப்பூவின் மணத்தை நாம் நுகர்ந்தால் ஆஹா.., ஹா என்று இதனின் தன்மை வருகின்றது.

இதற்கு மாறான உணர்வு அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்துவிட்டு தன் உணர்வின் தன்மையான ஒளி என்ற உணர்வைத் தான் உருவாக்குமே தவிர, அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.

துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வு வரும்போது இது பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும். ஆக ஒளி என்ற நிலைகள். இது என்னுடைய நண்பன் என்று அது அறியாது.

ஆனால், அறியக்கூடிய பருவம் வந்தால் பின் மனிதனுக்குத் தான் வரவேண்டும்.

சப்தரிஷி மண்டலம், அது என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ஊட்டி அங்கே ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.  ஒளிக்குள் ஒளியாகும்போது, அடர்த்தியின் ஒளியாகி
இருளை வெல்லும் தன்மையும்
நஞ்சை வெல்லும் தன்மையும்தான் பெறும்.
மறுபடியும் நாம் இங்கே வரமுடியாது.

ஆகவே, என்றும் ஏகாந்த நிலை என்று எதிலுமே பகைமை இல்லாத நிலையும், பகைமையை மாற்றி அமைக்கும் சக்தி இந்த மனித உடலிலே பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். ஏனென்றால், ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை ஒளி - சப்தரிஷி சிருஷ்டித்துக் கொண்டது.

கணவனும் மனைவியும் இதைப்போல உணர்வின் தன்மை ஒன்றாக்கி உயிர் எப்படி இருக்கின்றதோ அதுபோல ஒளியாக வாழும்.

கணவன் உயிரும் அதற்குள் பெண்பால் என்ற உணர்வு உண்டு. மனைவி என்ற உணர்வு இருந்தால் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

ஆக, பெண்பால் என்ற நிலைகள் அதிகமானால் இது செடி கொடியானாலும், கல்லானாலும் மலையானாலும் இதைப்போல நட்சத்திர உணர்வு எது கலவையானதோ பெண்பாலின் உணர்வு அதிகமானால் மலைகளில் அதிகமான வளர்ச்சி தெரியும்.

அதே சமயத்தில், ஆண்பால் என்ற உணர்வு அதிகமானால் மலையில் வளர்ச்சி குறைவாக இருக்கும். இதைப்போல இந்த ஆண்பால் என்ற உணர்வு வரப்போகும்போது தன் இனத்தின் விருத்தியை அங்கே வளர்க்க முடியாது.

இன்று பார்க்கலாம் பப்பாளியில் ஆண்பால் என்ற மலர்கள் வெளிப்படும்போது அந்த மணத்தைத் தாங்கி செல்லும் பப்பாளி அடுத்து தன் இனத்தின் தன்மை விருத்தியாகும்.

ஆண்பால் என்ற நிலை அந்த மரம் இல்லையென்றால், அந்த உணர்வே படவில்லையென்றால் அதனுடைய வளர்ச்சி குன்றும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

ஆகவே நாம் இதன் உணர்வு கொண்டு இன்று சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும்போது நாம் உயிர் அங்கே ஒருங்கிணைந்த பகைமையற்ற நிலைகள் வாழ முடியும்.

ஆக பகைமையற்ற என்றும் ஒளியின் உணர்வாக வாழும்போது நாம் ஒன்று சேர்ந்த இயக்கமாக நமக்குள் வரும். உயிர் என்ற நிலைகள் இருக்கும் போது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும்போது தனுசுகோடி.

தீமைகளை நீக்கி நீக்கி பல கோடி உடல்களில் புழுவிலிருந்து மிருகமாக வருகின்ற வரையிலும் கோடிக்கரை. ஆக இவையெல்லாம் உடல்பெறும் தன்மைகள் சிவதனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்த உணர்வை நமக்குள் பெருக்கிவிட்டால் தனுசுகோடி.

தீமையை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி உயிரைப்போல உணர்வுகள் ஒன்றாக்கப்படும் போது ஒன்றென்ற நிலை இயக்குவதுதான் தனுசுகோடி என்ற நிலை இங்கே கூறப்படுகின்றது.


ஆகவே நமக்குள் பகைமையை அகற்றி அருளுணர்வை கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும்போது நாம் கணவன் மனைவி என்று உருவாக்கிய உணர்வு ரிஷி என்ற தன்மைதான் துருவ மகரிஷி.