ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2015

நமது முன்னோர்கள் சப்தரிஷி மண்டலங்களை அடைந்துவிட்டார்களா...? எப்படித் தெரிந்துகொள்வது...?

நம் முன்னோர்களை எண்ணி அவர்கள் சப்தரிஷி மண்டலங்களை அடைய வேண்டும்.எல்லோரும் தியானிக்கின்றோம்.

அவர்கள் சப்தரிஷி மண்டலங்களில் அடைந்து விட்டார்களா? அதை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?

இப்போது நாம் வழக்கத்தில் என்ன செய்கிறோம்?. நாம் இறந்தவருடைய சாம்பலைக் கொண்டுபோய் கங்கையில் கரைத்து விட்டால் பாவம் போகும் என்று கரைக்கிறோம்.

அடுத்து வீட்டில் வந்து எண்ணெய் தேய்த்து மூழுகிவிட்டு சொந்த பந்தமெல்லாம் புத்தாடைகளை உடுத்தச்செய்கிறார்கள்.

பின், தலைமகன் மாவிளக்கை வைத்து நெய் தீபம் இட்டு அணையா விளக்காகக் கொண்டுபோய் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் மோட்ச தீபம் என்று சொல்கிறார்கள்.

அதே சமயத்தில் நாம் பக்தி மார்க்கத்தில் சிக்குண்ட மந்திர ஒலிகள் நமக்குள் உண்டு. அந்த மந்திர ஒலிகள் கொண்டு நாம் இறந்தபின் நாம் குடும்பத்தார் உணவிட்டு அமாவாசை அன்று கூப்பிடுவார்கள்.

மந்திரவாதிகள் நம் வீட்டு முச்சந்தியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்வார்கள். நம் வீட்டுக்கு முன்னாடி வாசல்படியில் உள்ள தலை முடியை எடுத்துக் கொள்வார்கள்.

இதை எடுத்து இதனுடைய உணர்வின் துணை கொண்டு அவருடைய ஆத்மா ஆவியாக இருப்பதை அவர் எந்த பக்தி கொண்டு செய்தனரோ அந்த மந்திரங்களை ஜெபிக்கப்படும்போது இறந்த ஆத்மாவை மந்திரம் செய்பவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால், மற்ற கருச் சிதைவான அந்த உடல்களில் இதை ஏவி இந்த உணர்வின் தன்மை ஏவப்பட்டு ந்திரங்களைச் சொல்வார்கள்.

அதைச் சொல்லப்படும்போது அதை பலவீனமான நிலையிலிருந்து ஒன்றும் அறியாத அந்த ஆவியின் தன்மை கவரப்பட்டு தைக் குட்டிச்சாத்தானாக மாற்றுவார்கள்.

குட்டிச்சாத்தானாக மாற்றி இவன் உணர்வுகள் செயல்படும் தன்மைக்குத் தக்க பில்லி சூனியம் என்ற நிலைக்குச் செய்வார்கள். இதுதான் நாம் செய்து கொண்ட இன்றைய நிலைகள்.

உடலைவிட்டுச் சென்ற ஆன்மாக்கள் அவர்கள் யார் மேலாவது கோபமாக அல்லது பாசமான நிலைகளில் இருந்தால் அந்த ஆன்மா அவர் உடலுக்குள் தான் போகிறது.

அப்படி அவர் உடலுக்குள்ளே போனால் பரம்பரை குணம் பரம்பரை நோயாகத்தான் வரும். ஆகவே, இவர் மோட்சத்திற்கும் போகவில்லை. சொர்க்கத்திற்கும் போகவில்லை.

இதைப்போல உணர்வுகளை எடுத்து சில மந்திரங்களைச் செய்யப்படும்போது என்னாகும்? யார் உடலில்? அந்தக் குடும்பத்தில் அதாவது குலதெய்வம் வந்த் அருளாடுகிறது என்று சொல்வார்கள்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமாவாசை அன்று நாம் கூப்பிடும்போது எல்லாரும் சேர்த்து அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அருளாடத் தொடங்கி நான் வந்துவிட்டேன்டா..,” என்று சொல்லி இதெல்லாம் குலதெய்வம் என்று சொல்லுகின்றோம்.

1.இது மூதாதையர்கள் உயிரான்மாக்களை அவர்களை நம் உடலுக்குள்
2.இங்கு இழுக்கின்றோமே தவிர
3.அவர்கள் எவரையும் மோட்சத்திற்கு நாம் அனுப்புவதில்லை.

எனவே நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவேற்றிக்கொண்டு இந்த உடலை விட்டு சென்ற இந்த ஆன்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்திச் செல்லவேண்டும்.

ஏனென்றால் அவருடைய உணர்வுதான் உடலாக நாம் உருவாகியுள்ளோம். துருவ நட்சத்திரத்தின் வலுக்கொண்டபின் இந்த ஆன்மாக்களை விண் செலுத்துகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் நஞ்சை கரைத்த அந்த உணர்வுகள் பட்டபின் இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் கரைகின்றது.

இந்த முறைப்படி விண் செலுத்தினோம் என்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றனர்.

ப்படித்தான் அங்கே கரைக்கவேண்டுமே தவிர இங்கே தண்ணீரிலே கரைப்பதில்லை.

நாம் இதற்கு முன்னால் செய்யத் தவறிவிட்டோம் இன்னொரு உடலுக்குள் புகுந்து விடும்.

காலை துருவதியானத்தில் நாம் அடிக்கடி இந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின், இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களான குல தெய்வங்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களில் இணைய வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்ட கூட்ட
1.அவர்கள் எந்த உடலில் இருந்தாலும்
2.இந்த உணர்வுகள் அந்த உடலில் இருப்பவர்களில் சேர்க்கப்பட்டு
3.துரித நிலைகள் கொண்டு அவர்களுக்கு நலம் பெறும்.

ஏனென்றால் அவர் உடலில் எந்த நோயின் தன்மை பெற்றதோ அதன் உணர்வின் இயக்கமாகத் தான் அது இயக்கும் அது சார்புடையோர் நிலைகளில் எண்ணப்படும்போது அவர்கள் உணர்வு இங்கே இருப்பதால்
1.இதைப்போல வேறொரு உடலில் இருந்தாலும்
2.இந்த உணர்வுகள் கலக்கப்பட்டு நாளடைவில் வெளிவந்தபின்
3.நாம் காலையில் இதைப்போல துருவதியானம் செயல்படும்போது
4.அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதனால்
5.எளிதில் சப்தரிஷி மண்டலத்தில் அடையச் செய்து
6.அந்த ஆன்மாக்களை அனுப்பி விடலாம்.
7.இதில் நீங்கள் விண் செலுத்தியது உங்களுக்குள் அந்த உணர்வு வரும்.

அவர்கள் சொர்க்கம் அடைந்த அந்த உணர்வினை உங்களுக்கு தெளிவாகக் கூற நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் என்ற இந்த உணர்வுகளை கனாக்களில் வந்து சொல்லவே சொல்வார்கள். சிலருக்கு அது தெரியும்.

சொர்க்கம். அடையவில்லை என்றால் அதே சமயத்தில் உடலைவிட்டு வந்தால் என்னை ஏன் அனுப்பவில்லை என்று உங்களுக்குள் அந்த உணர்வை ஊட்டி உங்களுக்குள் நினைவு படுத்தும்

ஏனென்றால் உங்கள் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வு என்ற உணர்ச்சியால் அறியச்செய்யும் தன்மை உண்டு.

இதைப்போல உங்கள் மூதாதையர் யாராவது சொர்க்கம் அடைந்துவிட்டால் அவர்கள் உணர்வு உங்களுக்குள் இருந்தால் இந்த ஆன்மா இன்னொரு உடலைவிட்டு வந்தபின்
1.“என்னையும் நீ அனுப்பு. என்ற இந்த உணர்வு கொண்டு
2.உணர்ச்சியால் ஓதி இயக்கப்பட்டு அதை நினைவு கூர்ந்து
3.அவர்களையும் விண்ணுக்குச் செலுத்தலாம்.

இதுதான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மனிதன் விண் செல்ல வேண்டிய மார்க்கம்.